முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் மீது அதிமுக வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 30 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

இந்நிலையில் பதவியேற்பு விழா முடிவடைந்த அடுத்த சில நிமிடங்களில் ஓ.பி.எஸ் வீடு முன்பு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பெரும்  பதற்றம் நிலவி வருகிறது.