வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய் டிவி பணத்துக்காக பிக் பாஸ் மூலம் செய்யும் அட்டூழியங்கள்.. மொத்த ஊரும் கொந்தளிப்பில் ஏற்படுத்திய சர்ச்சை

Vijay Tv Bigg Boss Tamil 8: விஜய் டிவி மூலம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஆக தற்போது விஜய் சேதுபதி முதல் முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் இதுவரை ஏற்படாத பஞ்சாயத்து தற்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. அதாவது கமல் தொகுத்து வழங்கிய பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் மூலம் தான் சர்ச்சைகள் வெடித்தது.

ஆனால் வெளியே அதை நிறுத்தும் அளவிற்கு எந்த போராட்டங்களும் பெருசாக வரவில்லை. ஆனால் தற்போது விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8வது நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கும் வகையில் மொத்த ஊரும் கொந்தளித்து வருகிறார்கள். அதாவது கோவில்பட்டி ஊரை சேர்ந்த மக்கள், கோட்டாட்சியர் மகாலட்சுமி இடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் வைத்த கோரிக்கை என்னவென்றால் ஆண்கள் மற்றும் பெண்களை ஒரே வீட்டிற்குள் அடைத்து வைத்து அவர்களுடைய அந்தரங்க விஷயங்களை வெளிக்காட்டி அதன் மூலம் பணத்தை சம்பாதித்து வருவதை தடை செய்யப்பட வேண்டும். கலாச்சாரத்தை கெடுக்கும் அளவிற்கு பல அட்டூழியங்கள் அந்த வீட்டில் நடந்து வருகிறது. அதை எல்லாம் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

அத்துடன் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து வருவது பார்ப்பதற்கே கன்றாவியாக இருக்கிறது. அதிலும் உள்ளே டபுள் மீனிங் பேச்சு பேசி காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு வன்மமாக இருக்கிறது. அதனால் கோவில்பட்டி மக்கள் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோட்டாட்சியர் மகாலட்சியிடம் மனு குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கொந்தளித்து பொய் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆனால் இதுவரை 7 சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் அப்பொழுது எல்லாம் வராத சர்ச்சை இப்பொழுது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும்பொழுது வருகின்றது என்றால் இதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணம் இருப்பதாகவும் சில கருத்துக்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவி பல தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது வெடித்திருக்கும் புது பிரச்சினையையும் எப்படி விஜய் டிவி கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News