Tamil Cinema News | சினிமா செய்திகள்
கன்னட படத்தில் சிம்பு !
Published on
அட ஆமாங்க சிம்பு கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார், ஆனால் நடிகராக அல்ல பாடகராக.
குழந்தை நட்சரத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார். இவர் தற்பொழுது மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமன்றி அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிக்கும் 90 மில்லி படத்துக்கு இசையும் அமைத்து வருகிறார்.

STR
“இருவுதெல்லவா பிட்டு” என்ற கன்னட படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியிருக்கிறார். காவிரி பிரச்சனை குறித்து இவர் பதிவிட்ட கருத்து வைரலானது. மேலும் கன்னட மக்களிடம் இவருக்கு நன் மதிப்பும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கன்னட படமொன்றில் பாடகராக அறிமுகமாகிறார்.
