வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுடக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

அதே போல் கேஸ் கிரடிட் எனப்படும், வர்த்தக கடன் பெறுபவர்கள் பணமாகவே எடுத்துக் கொள்ளலாம்.

இதே போல் மேல்வரைபற்று மீதான கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.  மேல்வரைபற்று என்பது நாம் வங்கியில் வைத்திருக்கும் தொகையை விட கூடுதலாக பணம் எடுத்தும் கொள்ளும் முறை ஆகும்.

அதாவது நமது பரிவர்த்தனையை கணக்கில் கொண்டு, நம்மீது உள்ள நம்பிக்கையால் நமக்கு வங்கி கொடுக்கும் குறைந்த அளவிலான கடன் ஆகும்.

அதே நேரம் சேமிப்பு கணக்குகளில் தற்போது உள்ள 10 ஆயிரம் ரூபாய் தொகையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 10 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் வங்கிகளும் தங்களிடம் இருக்கும் பணத்தை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியின் வரம்பை உயர்த்தவோ, தளர்த்திக் கொள்ளவோ செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.