ரெண்டு பிரம்மாண்ட ஹீரோக்களை வைத்து உருவாகும் அட்லீ-யின் 6வது படம்.. பாலிவுட்டிற்கு தண்ணி காட்ட போகும் கமல்

அட்லீ- சல்மான் கான் இணையும் ”Atlee-6” படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கவைக்க கலம்ஹாசனின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்கிய ராஜா ராணி,தெறி,மெர்சல், பிகில் ஆகிய படங்களை அடுத்து, இந்திய சூப்பர்ஸ்டார்களால் கவனிக்கப்படும் அளவுக்கு உயர்ந்தார்.

கடந்தாண்டு அட்லீ இயக்கத்தில்,பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் ஜவான். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1148 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது.

எனவே அடுத்து, இன்னும் சில ஆண்டுகளுக்கு பாலிவுட்டில்தான் அட்லீ குடியிருப்பார் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல், அம்பானி வீட்டு கல்யாணத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவிலும் அட்லீ அவரது மனைவி பிரியாவும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், அட்லீ அடுத்து இயக்கவுள்ள புதுப்படத்தைப் பற்றித்தான் ஒட்டுமொத்த திரையுலகினரின் பேச்சும். ஷாருக்கானை இயக்கிய அட்லீ, அடுத்து மற்றோரு சூப்பர் ஸ்டாரான சல்மான் கானை இயக்கவுள்ளார். இது உறுதியாகியுள்ள நிலையில், இப்படத்தின் மொத்த ஸ்கிரீன் பிளேயை எழுதிவிட்டு, அதை சல்மான்கானிடம் அட்லீ கூறவிருக்கிறார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் சல்மானுக்கு நிகரான மற்றொரு கேரக்டரில் கமல்ஹாசன் நடிக்கவைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஷின் கல்கி-படத்தில் வில்லனாக கலக்கிய உலக நாயகன் கமல், சல்மான்கானுடன் இணைந்து நடித்தால் இப்படமும் சூப்பர் ஹிட் என்பது இரண்டு சூப்பர் ஸ்டார்கள் ரசிகர்களின் கனவாக உள்ளது.

இந்த அதிசயம் வரும் ஆண்டு 2025 -ல் ஷுட்டிங் தொடங்கி வரும் 2026 ஆண்டில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் இதில் நடிக்கவுள்ள ஸ்டார் கேஸ்ட்விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News