fbpx
Connect with us

இயக்குநர் அட்லி ஒரு ஜீரோ.! பிரபல டாக்டர் ஆவேசம்.!

News / செய்திகள்

இயக்குநர் அட்லி ஒரு ஜீரோ.! பிரபல டாக்டர் ஆவேசம்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்து செம்ம வசூல் செய்து வரும் படம் மெர்சல். இப்படத்தை தமிழகமே கொண்டாடி வருகின்றது.

ஒரு படத்தில் அரசியல் வசனம் இருந்தால் அதில் இருந்து கிளம்பும் சர்ச்சைகளே அந்தப் படத்தை ஜாக்பாட் வசூல் குவிக்க உதவும் என்பதற்கு சான்றாகி இருக்கிறது மெர்சல் திரைப்படம்.

mersal

ஒரு வாரத்தில் மட்டுமே அந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 170 கோடி அள்ளி வசூலில் சாதனை படைத்துள்ளது.ஒரு திரைப்படம் எப்படி அதிகம் பேரால் பேசப்படும் என்பதற்கு அதில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வசனங்களை வைத்தாலே போதுமானது.

அதிலும் அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்தப் படத்திற்கு விளம்பரமே தேவையில்லை.மெர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள் பிலிம்ஸ் அதை உணர்ந்திருக்கும்.

mersal vijay

mersal vijay

ரூ. 80 கோடி பட்ஜெட்டில் மெர்சல் படம் திட்டமிடப்பட்டு அது ரூ. 130 கோடி வரை எட்டியதால் போட்ட பணம் கிடைக்குமா என்று களக்கத்தில் இருந்தனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.

மேலும், உலகத்தமிழர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், இதில் மருத்துவர்களுக்கு எதிராக பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.இதனால் பல மருத்துவர்கள் கோபமாகவுள்ளனர், இதில் குறிப்பாக பிரபல டாக்டர் கார்த்திக் வரதராஜ் ஒரு பேட்டியில் அட்லீயை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.

mersal-box

இதில் இவர் கூறுகையில் ‘அட்லீ இந்த படத்திற்காக எந்த ஒரு groundwork-ம் செய்யவில்லை, விஜய் போல் ஒரு பெரிய நடிகர் ஒரு வசனத்தை பேசும் போது அது பெரிய லெவலில் ரீச் ஆகும்.அப்படி இருக்கும் போது அட்லீ ஒரு ஜீரோவாக தான் செயல்பட்டுள்ளார்’ என்று கோபமாக பேசியுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top