வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ராஜமெளலி படத்துலயே கை வைச்ச அட்லீ? சூப்பர் ஸ்டார் படத்துக்கு கதை ரெடி.. அடுத்து என்னாகப் போகுதோ?

தமிழ் சினிமாவுல ராஜா ராணி படத்துக்கு அப்புறம் தெறி, மெர்சல், பிகிலுனு மூன்று படம் நம்ம தளபதிய வைச்சு எடுத்து ஹிட்டு கொடுத்தாப்புல நம்ம அட்லீ. அதுக்கு அப்புறமா தளபதியோட மார்க்கெட்டும் பீக்கில போச்சு. அவரோட கேரியும் விர்ருனு மேல போச்சு.

அதுக்கு அப்புறம் பாலிவுட் போறானுன்னு பேச்சு வந்துச்சு. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானே அதை கம்பார்ம் பண்ணுனதுக்கு அப்புறமா தான் எல்லோருமே மூக்கில விரல வைச்சு அட்லீய வியந்து பார்த்தாங்க.

சொன்ன மாறியே ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமனி காம்பினேசன்ல ஜவான் – னு படமெடுத்து போன வருஷம் ரிலீஸ் பண்ணுனாரு. என்னா ஓட்டம். வத்திக்கிடந்த பாலிவுடில சோலவனமாக்குன மாறி ஜவான் படம் 1000 கோடிக்கு மேல வசூலிச்சு, ஷாருக்கானுக்கும் நல்ல பேரு. அட்லீயோட கிராஃபும் எகிறிருச்சு.

அடுத்து அட்லீ சல்மான் கான் – கமல் நடிப்பு ஒரு படம் பண்றதா பேச்சு அடிபட்டுச்சு. இது ஏறக்குறைய உறுதின்னு சொல்றாங்க. இந்த நேரத்துல தான் ஒரு முக்கிய விசயம் பரவிட்டிருக்கு. அது எந்த அளவுக்கு உண்மையின்னு தெரியில.

சூப்பர் ஸ்டாருக்காக ராஜெமெளலியின் கதையை பட்டி, டிங்கரிங் செய்யும் அட்லீ?

அதாவது, இந்தப் படத்தோட கதை, ராஜமெளலியோட மகதீரா படத்துல வர்ற மாதிரி நிகழ் காலத்திலையும், முன் ஜென்மத்திலையும் நடக்கிற மாறி இருகுதாமாம். இந்த ரெபரன்ஸா கூட அட்லீ எடுத்து இப்போதைக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் பட்டி, டிங்கரிங் எல்லாம் பண்ண வாய்ப்பிருக்குன்னு பேசிக்கறாங்க.

ஏற்கனவே ராஜா ராணி படமே மெளன ராகம் படத்துல இருந்து உருவுனதா நிறைய பேர் சொல்லிக்கறாங்க. அதேபோல் பிகில் படத்தையும் சொன்னாங்க. அதேபோல தான் இப்ப சல்மான் கான் நடிக்கப்போற படத்த பத்தியும் பேசிக்கிறாங்க.

பேசறவங்க பேசட்டும் திறமை தான முக்கியம் பாஸ்!

ஆனால், அட்லீயோட திறமையை யாரும் குறைச்சு மதிப்பிடக் கூடாது. ஷங்கரோட சிஷ்யனா இருந்தாலும், அவரே ரூ.800 கோடிக்கு மேல் வசூல்ல தாண்ட முடியில. ஆனால் அட்லீ சினிமாவுக்கு வந்து கொஞ்ச வருசத்துல அதுவும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரேஞ்சுக்கு போய் ஜவான் படம் பண்ணி, தன் திறமையால ரூ.1000 கோடியும் வசூலிச்சிட்டாரு. அதுனால அவருமேல நம்பிக்கை இருக்காறதால சூப்பர் ஸ்டார்கள் தொடர்ந்து அவரு படத்துல நடிக்கிறாங்க, பேசறவுங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அதுனால சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கிறது அட்லியோட புதிய கதையா கூட இருக்கலாம்னு சொல்றாங்க. எப்படியோ படம் நல்லா இருந்தா சரி என நெட்டிசன்கள் கமெண்ட் அடிச்சிட்டு இருக்காங்க.

- Advertisement -

Trending News