Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷாருக்கான் படத்தை காப்பி அடித்த அட்லி.. மேடையிலேயே ரோஸ்ட் செய்த தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் கே ராஜன், அட்லி பற்றி ஒரு விழா மேடையில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அட்லி தற்போது பாலிவுட் பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார். அங்கு ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கும் ஜவான் திரைப்படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். மிகவும் விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்று வரும் அப்படம் வரும் ஜூன் மாதத்தில் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன், அட்லி பற்றி ஒரு விழா மேடையில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதாவது அட்லியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு பழைய திரைப்படத்தின் காப்பி என்ற விமர்சனம் இப்போது வரை இருக்கிறது. அதையும் ரசிகர்கள் ஆதாரத்துடன் வெளியிட்டு அவரை காப்பி இயக்குனர் என கூறுவார்கள்.

Also read: அட்லியை சுத்தி சுத்தி அடிக்கும் பாலிவுட் சினிமா.. ஜவான் பட ரிலீசுக்கு வந்த அடுத்த சிக்கல்

அதைப்பற்றி குறிப்பிட்டு இருக்கும் ராஜன் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி திரைப்படத்தின் காப்பி தான் பிகில் திரைப்படம் என்று மேடையிலேயே அவரை ரோஸ்ட் செய்திருந்தார். அதாவது கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சக் தே இந்தியா திரைப்படம் மகளிர் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

அதையேதான் அட்லி கொஞ்சம் உல்டாவாக கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுத்து இருக்கிறார் என ராஜன் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் அந்த படத்தால் தயாரிப்பாளர் ரொம்பவும் கஷ்டப்பட்டார் என்றும் எதிர்பார்த்ததை விட பட்ஜெட் தாறுமாறாக எகிறியது என்றும் காட்டமாக தெரிவித்து இருந்தார்.

Also read: பாலிவுட் போயும் வேலையை காட்டிய அட்லி.. ரஜினி ஸ்டைலில் சண்டை போட்ட ஷாருக்கான், லீக்கான காட்சிகள்

அந்த வகையில் அட்லி தயாரிப்பாளரை ஃபுட்பால் என நினைத்து எட்டி உதைத்து விளையாடிவிட்டார் என்றும் கோபமாக கூறினார். மேலும் ஏஜிஎஸ் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் என்பதால் இதை எப்படியோ சமாளித்து விட்டார்கள். ஆனால் சாதாரண தயாரிப்பாளர்களால் இது முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தவிர பல இயக்குனர்கள் அவுட்டோர் ஷூட்டிங் செல்லும்போது கூட சில விஷயங்களில் கமிஷன் வாங்குகிறார்கள் எனவும் அவர் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். தற்போது ராஜன் அட்லி பற்றி கூறியுள்ள இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே அவரை பங்கம் செய்து வந்த ரசிகர்கள் இந்த வீடியோவையும் ஷேர் செய்து கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

Also read: அட்லி உருட்டியதில் மிரண்டு போன சன் பிக்சர்ஸ்.. இயக்குனர் சங்கரை மிஞ்சிய சிஷ்யன்

Continue Reading
To Top