விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர் ஆவார், இவர் நடித்து முடித்துள்ள சர்கார் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகப்போகிறது, அதுமட்டுமில்லாமல் வசூலிலும் மாஸ் காட்ட இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

Actor-Vijay-in-IARA-Awards-2018
Actor-Vijay

ஏனென்றால் படத்தில் விஜய் அடுத்து முருகதாஸ், ஏ ஆர் ரகுமான், சன் பிக்சர்ஸ் என மிகப் பெரிய கூட்டணி இருக்கிறது, ஒரு பிரபலம் இருந்தாலே படம் ஹிட்டாகும், இந்த படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ளார்கள் அப்பொழுது சொல்லவா வேண்டும்.

விஜய் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அட்லியுடன் இணைய இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் அவர்  சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி விருது விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் கலந்து கொண்ட அட்லியிடம்  நீங்கள் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் விஜய் அவர்கள் முதலமைச்சராக நடித்தால் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என கேட்டுள்ளார் அதற்கு சற்றும் யோசிக்காமல் அட்லி “ஆளப்போறான் தமிழன்” என்று கூறினார் இப்படி கூறியதும் விஜய் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.