fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அட்லீ விஜய் படக்கதை இதுதான்! வெளிவராத தகவல்!

vijay atlee vijay61

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீ விஜய் படக்கதை இதுதான்! வெளிவராத தகவல்!

அட்லீ-அவரது முதல் படமான ராஜா ராணி, மவுன ராகத்தின் மறு ஜெராக்ஸ். அவரது இரண்டாவது படமான தெறி, சத்ரியன் படத்தின் மறு ஜெராக்ஸ். அப்படியென்றால் அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் விஜய்61 எந்தப்படத்தின் கதை? இந்த சந்தேகம் ரசிகர்களுக்கு வருமல்லவா? இந்த முறை ஒரு பய புத்தியிலேயும் சிக்கக் கூடாது என்று முடிவெடுத்த அட்லீ, வெற்றி விழா படத்தையும் வேறொரு ஆங்கிலப்படத்தின் கதையையும் அப்படியே அடித்து விஜய் 61 ல் செருகிவிட்டாராம்.

அதுதான் ‘பார்ன் சுப்ரமசி’ என்ற ஹாலிவுட் படம் என்று காதைக் கடிக்கிறது ஏரியா. கதைப்படி விஜய் ஒரு போலீஸ் ஆபிசர். ஒரு ஆக்சிடென்ட்டில் அவரது நினைவுகள் மறந்துவிடுகின்றன. தான் யார் என்பதை கண்டுபிடிக்கக் கிளம்புகிறார். இன்னொரு பக்கம் போலீஸ் இவரை தேடி வருகிறது. ஒரு நல்ல ஆபிசருக்கு இப்படியாகிவிட்டதே… அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகதான் இப்படி போலீஸ் தேடுகிறது. ஆனால் அது புரியாத விஜய் போலீஸ் கண்ணிலும் தப்பி, தான் யார் என்ற உண்மையையும் கண்டுபிடிப்பதே கதை. இதில் பார்ன் சுப்ரமசியை கலந்தால் விஜய் 61 ரெடி!

எப்பவே திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகமல்லவா? இந்தப்படத்தையும் ஹிட் பட வரிசையில் சேர்த்துவிடுவார் அட்லீ. கூட்டிக் கழித்துப் பார்த்தால் வெற்றிதானே பேசும்..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top