தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

இதில் ஒரு கெட்டப் முறுக்கு மீசையுடன் இருக்கும் கெட்டப். இதில் விஜய்யின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகிவிட்டது. இன்னொரு கெட்டப் கிளீன் ஷேவ் செய்த கெட்டப்பாம். அந்த புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி அதிகளவில் பரவி வருகிறது.

படம் ஆரம்பிக்கும் போதே இப்படத்தின் கெட்டப் எதுவும் வெளியே தெரிய கூடாது, எனவே நீங்கள் பொது விழாக்களில் பங்கேற்பதையும் ரசிகர்களை சந்திப்பதையும் இனி தவிர்க்க வேண்டும் என விஜய்யிடம் அட்லி கூறினாராம். முதலில் ஓகே சொன்ன விஜய் தற்போது அதை நிறைவேற்றாமல் இருப்பது அட்லிக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.