மணிரத்தினத்தின் இடத்தை இளம் வயதிலேயே பிடித்த அட்லி.. யாரும் எட்ட முடியாத சாதனை!

80களின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் கே பாலச்சந்தர், பாலு மகேந்திரன் அவர்களின் வரிசையில் மணிரத்னம் தத்ரூபமாக படங்களை இயக்குவதில் கெட்டிக்காரன். அதுவும் இவருடைய படங்களில் காதல், தீவிரவாதம் ஆகிய இரண்டையும் முக்கியமாக வைத்து நகர்ப்புற வாழ் நடுத்தர மக்களை பின்னணியாகக் கொண்டு படத்தை இயக்குவதை வழக்கமாக வைத்திருப்பார்.

இவருடைய படங்கள் சிறந்த திரைக்கதைக்கு மட்டுமல்லாமல் நேர்த்தியான தொழில்நுட்பத் இருக்கும், சுருக்கமான வசனத்திற்கும் பெயர் போனவை. அதுமட்டுமின்றி இது வரை யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக ‘பல்லவி அனுபல்லவி’ என்ற படத்தை இயக்கி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சூப்பர் ஹிட் படங்களை வெகுவிரைவிலேயே இயக்கிய மணிரத்தினம், அதன் பிறகு பாலிவுட்டிற்கு முன்னேறினார்.

பாலிவுட் கதாநாயகனான ஷாருக்கானை வைத்து இந்தியில் 1998 ஆம் ஆண்டு ‘தில் சே’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். இந்த படத்தை அப்படியே தமிழில் ‘உயிரே’ என்ற தலைப்பில் மொழிப்பெயர்ப்பு செய்து தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளித்தவர். இப்படி 80களில் இருந்த இயக்குனர் மணிரத்னத்தை போலவே தற்காலத்தில் அந்த இடத்தை இளம் இயக்குனராக அட்லி பிடித்திருக்கிறார்.

அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு இளம் வயதிலேயே முன்னேறி இருப்பது தற்போது கோலிவுட்டை பெருமை அடையச் செய்கிறது. தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இளம் இயக்குனராக அட்லி. அதன்பிறகு தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கி தொடர்ந்து ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக மாறினார்.

அதன் பின் தற்போது பாலிவுட்டில் அறிமுகமான அட்லி, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று தமிழ் சினிமாவின் பெருமையை நிலைநிறுத்துவதற்காக தமிழ் இயக்குனர் மணிரத்தினம் போலவே அட்லியும் இளம்வயதில் செய்திருக்கும் இந்த சாதனை ஜவான் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்