Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-atlee-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீக்கு காத்திருக்கும் சவால்.. விஜய் இல்லாமல் ஹிட் கொடுப்பாரா?

அட்லீ மீது தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. என்னதான் கமர்ஷியல் இயக்குனராக இருந்தாலும் காப்பி அடிப்பதற்கு ஒரு நியாயம் வேண்டாமா என்கிறார்கள் ரசிகர்கள்.

காப்பி அடித்து வெற்றி கொடுப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். பலரும் ரீமேக் படங்களின் ரைட்ஸ் வாங்கி அப்படியே தமிழில் படம் எடுத்தும் அவர்களால் வெற்றி கொடுக்க முடியவில்லை.

ஆனால் அட்லீ சில பல படங்களைப் பார்த்து அதில் சில பல காட்சிகளை எடுத்து ஒன்றாக சேர்த்து எவ்வளவு வேலை செய்கிறார். கலாய்ப்பவர்கள் ஒரு பக்கம் கலாய்த்து கொண்டிருந்தாலும் அட்லீயின் சம்பளம் தற்போது 25 கோடிக்கும் மேல்.

தளபதி விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியதால் அவருக்கு இந்த அளவு சம்பளம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் தயாரிப்பாளர்கள். அட்லீக்கு தளபதி விஜய் தான் சம்பளத்தை நிர்ணயித்தது என்பது ஆச்சரியம்.

தற்போது தளபதி விஜய், அட்லீ படங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லையாம். மூன்று படங்களில் அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. விஜய் தற்போது சுதாரித்துக்கொண்டு இளம் இயக்குனருடன் கைகோர்க்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் முன்னணி நடிகர்கள் அட்லீயுடன் இணைய தயங்கி வருவதால் தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களை வைத்து வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அட்லீ.

விஜய் இல்லையென்றால் அட்லீ இல்லை என்பதுதான் உண்மை. தற்போது விஜய் கழட்டி விட்டதால் எப்படியாவது வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் அட்லீ. ராஜா ராணி படத்தில் ஏமாந்த மணிரத்னம் இந்த முறை ஏமாற மாட்டார் என நம்பலாம்.

Continue Reading
To Top