Tamil Cinema News | சினிமா செய்திகள்
சார்! ரொம்ப கலாய்க்கிறாங்க, அசிஸ்டண்ட் டைரக்டர் வாய்ப்பாவது கொடுங்க என கெஞ்சிய அட்லீ.. சரி வா! என்ற ஷாருக்கான்
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. இருந்தாலும் அவருக்கு காப்பி இயக்குனர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது.
இது ஒருபுறமிருக்க தயாரிப்பாளர் தரப்புக்கு அதிக செலவு வைப்பதால் தமிழ் சினிமாவில் இனி அட்லீ வைத்து படம் தயாரிக்க போவதில்லை என ஒரு கூட்டமே சுற்றி வருகிறது.
யார் தலையிலும் மிளகாய் அரைக்கும் முடியாத நிலைமையில் உள்ள அட்லீ நேரடியாக வண்டியை பாலிவுட் பக்கம் திருப்பினார். அங்கு வங்குல மாட்டுன எலியாக அட்லீயிடம் மாட்டியவர் ஷாருக்கான்.
நீண்ட நாட்களாக தோல்வி படங்களை கொடுத்து வரும் ஷாருக்கானுக்கு கமர்சியல் அம்சமுள்ள ஆக்சன் கதை ஒன்றை கூறியுள்ளாராம் அட்லீ. அதுவும் மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தின் கதை தழுவல் தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
ஆனால் ஷாருக்கான் ஹிந்தியில் தொடர்ந்து இரண்டு இயக்குனர்களுடன் பணியாற்ற இருந்த நிலையில், அட்லீயின் படம் தள்ளிச் சென்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் அட்லீ சமூகவலைதளத்தில் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் கிடையாது.
இந்நிலையில் எப்படியாவது ஷாருக்கான் பட வாய்ப்பை பெற்று பேசியவர்கள் மூஞ்சியில் கரியை பூச வேண்டும் என தொடர்ந்து ஷாருக்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அட்லீ. தற்போது அதற்கு பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
கடைசியாக ஒரு முறை முழு கதையையும் ரெடி செய்துவிட்டு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் ஷாருக்கான். இதுவும் உண்மையா அல்லது அட்லீ தரப்பு சமூக வலைத்தளத்தில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி கிளப்பி விட்டார்களா என்பது தெரியவில்லை.
