fbpx
Connect with us

Cinemapettai

படம் வருதோ இல்லையோ, இந்த பொய்ய கேட்க நல்லா இருக்கு.. ஷாருக்கான் பட வதந்தியை கொண்டாடும் அட்லீ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படம் வருதோ இல்லையோ, இந்த பொய்ய கேட்க நல்லா இருக்கு.. ஷாருக்கான் பட வதந்தியை கொண்டாடும் அட்லீ

பிகில் படத்திற்கு பிறகு அட்லீ ஷாருக்கான் படத்தை இயக்கப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக கடந்த வாரத்தில் அட்லீ மற்றும் சாருக்கான் படத்தை பற்றிய செய்திகள் அதிகமாக பரவியது அட்லீக்கே ஆச்சரியத்தை கொடுத்திருக்கும்.

பிகில் படம் பெரிய அளவில் வசூல் செய்தும் அட்லீக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. அட்லீயின் மீது பல்வேறு விதமான கலவை விமர்சனங்கள் வைக்கப்பட்டதால் தமிழில் அவரை வைத்து படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை.

இதை பல தயாரிப்பாளர்கள் நேரடியாக பேட்டியில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அட்லீ பாலிவுட் சென்று ஷாருக்கானை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மேலும் அந்த படம் அடுத்த வருட சம்மரில் தொடங்க இருப்பதாகவும் பரவி வந்த வதந்தியை அட்லீ என்ஜாய் செய்கிறாராம். இப்படியாவது அந்த பட வாய்ப்பு கிடைக்கட்டும் என நினைக்கிறார் போல.

ஆனால் பாலிவுட் வட்டாரத்தில் அட்லீ இப்போதைக்கு கிடையாது என்பதுதான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. ஷாருக்கான் கருணை காட்டினால் அட்லீ பாலிவுட்டுக்கு பிறப்பது உறுதி.

Continue Reading
To Top