Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்லீ-ஷாருக்கான் பட ஹீரோயின் இவர்தான்! சத்தமில்லாமல் சாதித்த அட்லீ
ஷாருக்கான் அட்லீ படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என சமீபகாலமாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த படத்திற்கான நாயகி அறிவிப்பு வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் இவ்வளவு குறுகிய காலத்தில் வெறும் நான்கு படங்களை மட்டும் இயக்கி முன்னணி இயக்குநர் ரேஞ்சுக்கு வளர்ந்தவர் தான் அட்லீ.
அட்லீயின் பட கதை விவாதத்தில் நிறைய எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் அதையெல்லாம் அடித்து நொறுக்கி தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்க ரெடியாகி விட்டார்.
பிகில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆன நிலையில் அட்லீ மற்றும் ஷாருக்கான் இருவரும் ஒரு படத்தில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் அந்த செய்தி உறுதியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படம் மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால் அட்லீ இந்திய அளவில் மிகப் பெரிய இயக்குனராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஷாருக்கானும் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வருவதால் அட்லீ படம் அவருக்கும் முக்கியமாக கருதப்படுகிறது.
