அட்லீ, போயிட்டு ஒரு ஆறு மாசம் கழிச்சு வாங்க.. கட்டையை போட்ட முன்னணி நடிகர்

வெறும் நான்கு படங்களை மட்டுமே டைரக்ட் செய்து இன்று இந்தியாவில் பேசப்படும் இயக்குனராக மாறியுள்ளார் அட்லீ. அந்த வகையில் அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ராஜா ராணி என்ற மௌனராகம் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்தவர்தான் அட்லீ. பழைய கதையாக இருந்தாலும் புதிய மசாலாவை தூவி அனைவரும் ரசிக்கும்படி செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தெறி என்ற பெயரில் வெளியான சத்ரியன் படமும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று விஜய்யின் சினிமா கேரியரில் முக்கிய திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த படத்திற்கு முன்னால் தான் புலி என்ற தோல்வி படத்தைக் கொடுத்திருந்தார் விஜய்.

தொடர்ந்து விஜய்யுடன் இணைந்த மெர்சல், பிகில் போன்ற படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக விஜய்க்கு உச்சத்தை தொட்ட படங்களாக மாறியது. அதிலும் பிகில் திரைப்படம் விஜய்யின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக மாறியது.

இப்படி தமிழ் சினிமாவில் அட்லீயின் வளர்ச்சியை கவனித்த ஷாருக்கான் வழியே வந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்கப்போகும் கனவில் இருந்தார் அட்லீ.

இந்நிலையில் தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் அந்த படத்தை முடித்து விட்டு அதன் பிறகு வேண்டுமானால் உங்கள் படத்தில் நடிக்கிறேன், ஆனால் அதற்கு இன்னும் 6 மாதம் ஆகும் என ஓப்பனாக சொல்லிவிட்டாராம் ஷாருக்கான். இந்த வருட இறுதியில் ஷாருக்கான் அட்லீ படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

atlee-sharukhan-cinemapettai
atlee-sharukhan-cinemapettai
- Advertisement -spot_img

Trending News