செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

விஜய்யை கைகழுவி விட்ட அட்லீ.. வேறு ஹீரோவுக்கு வலை வீசிய ஜவான் படக்குழு

தளபதி விஜய்யும், அட்லீயும் நீண்ட காலமாக நட்பாக பழகி வருகிறார்கள். ராஜா ராணி படத்தை முடித்த கையோடு டாப் நடிகரான விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அதை சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டதால் அட்லீக்கு மீண்டும் மீண்டும் விஜய் வாய்ப்பு கொடுத்து இருந்தார்.

அதுமட்டுமின்றி இப்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு தளபதி 67 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்க உள்ளதாக ஒரு பேச்சு போய்க் கொண்டு இருக்கிறது. அதற்காக தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா அட்லீ வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.

Also Read : கணக்கு வழக்கை பார்த்து காண்டான ஷாருக்கான்.. பயத்தில் மாமியார் வீட்டுக்கு திரும்பி வந்த அட்லீ

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு என்ற கோலிவுட் பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமின்றி ஷாருக்கான், விஜய்யும் கூட நெருங்கிய நண்பர்கள் தான். அதனால் தான் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பதான் படத்தின் ட்ரெய்லரை விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

Also Read : அட்லீயை பல கோடி கொடுத்து தூக்க ரெடியான 3 தயாரிப்பாளர்கள்.. இவர அடிச்சா அவர் தானா வருவாரு என்ற நம்பிக்கையாம்

ஆனால் ஜவான் படத்தில் விஜய் கேமியோ தோற்றத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அல்லு அர்ஜுன் ஜவான் படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் இப்போது அல்லு அர்ஜுனை ஜவான் படத்தில் ஒப்பந்தம் செய்ய ஷாருக்கான் மற்றும் அட்லி இருவரும் தனி விமானத்தில் அவரை சந்திக்க சென்றுள்ளனர். விஜய்யை நிராகரித்துவிட்டு அல்லு அர்ஜுனை போட என்ன காரணம் என்று இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தளபதி 69 படத்தில் விஜய், அட்லீ இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது.

Also Read : குழந்தை பிறந்த கையோடு அடித்து நொறுக்கும் அட்லீ.. பதான் வசூலுக்கு வைத்த டார்கெட்

- Advertisement -

Trending News