fbpx
Connect with us

Cinemapettai

அட்லீ வீட்டில் நிகழ்ந்த பரிதாபம்.. சோகத்தில் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீ வீட்டில் நிகழ்ந்த பரிதாபம்.. சோகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு சிறந்த கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்ற மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தார்.

தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அந்த படத்தின் தகவல்கள் கிட்டத்தட்ட உறுதியாகிய நிலையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அந்த படத்தில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இதுபற்றி ஷாருக்கான் மற்றும் அட்லீ ஆகிய இருவரும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இருந்தாலும் சைலண்டாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க அட்லீயின் மனைவியான ப்ரியாவின் தாத்தா மாரடைப்பு காரணமாக இறந்து விட்டாராம். இந்த தகவலை அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மீண்டும் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் ஒரு படம் உருவாகுமா என ரசிகர்கள் அவரை கேள்வி கேட்டும் வருகின்றனர்.

Continue Reading
To Top