விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தை காப்பி அடித்தாரா அட்லி.! இது ஷாருக்கானுக்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அட்லி பழைய படங்களில் இருந்து காப்பி அடித்து தான் புதிய படம் எடுப்பதாக பல தகவல்கள் வெளியாகின. இருந்தபோதிலும் அட்லி இயக்கிய தெறி படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதன் பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைத்த மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. அட்லியை பற்றி விமர்சனம் செய்து வந்தாலும் தொடர்ந்து பல நடிகர்களும் அட்லி படத்தில் நடிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அட்லி ஷாருக்கானை வைத்து பிரம்மாண்டமான ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார். சமீபத்தில் கூட இப்படத்திற்கான ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் படத்தினைப் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையை தான் இப்படத்தின் கதை எனவும் கூறி வருகின்றனர்.  மேலும் ஒரு சில காட்சிகளை மட்டும் வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

atlee
atlee

அட்லி கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து படத்தை எடுத்தாலும் சமூக வலைத்தளத்தில் இருக்கும் நெட்டிசன்கள் எப்போதுமே அட்லி கதை திருடி தான் படம் எடுப்பதாக கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் திரைத்துறையில் பணியாற்றி வருபவர்கள் ஒரு கூட அப்படித்தான் கூறி வருகின்றனர்.

ஆனால் பல இயக்குனர்கள் ஒரு படத்தின் இன்ஸ்பிரேஷன் என படங்களை எடுத்து உள்ளனர். ஆனால் மற்ற இயக்குனர்கள் யாரையும் கதை திருடி படம் எடுப்பதாக கூறுவதில்லை. அட்லியை மட்டும் ஏன் அப்படி கூறி வருகிறார்கள் என்பதற்கு காரணம் அட்லி விஜய் ரசிகன் என கூறியதால் ஒரு சில நெட்டிசன்கள் இந்த மாதிரி அட்லியை மட்டும் விமர்சனம் செய்து வருவதாக கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்