Connect with us

Cinemapettai

காப்பியடிக்கும் விவகாரத்தில் தொடர்ந்து சிக்கும் அட்லீ.. ஹாலிவுட் படத்திலிருந்து உருவிய பிகில் காட்சி

copy-atlee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காப்பியடிக்கும் விவகாரத்தில் தொடர்ந்து சிக்கும் அட்லீ.. ஹாலிவுட் படத்திலிருந்து உருவிய பிகில் காட்சி

நாளுக்கு நாள் அட்லியின் வளர்ச்சி அதிகமாகி கொண்டிருப்பதைப் போல, அவர் தொடர்ந்து மற்ற படங்களிலிருந்து காட்சிகளை காப்பியடிக்கும் விவகாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அட்லி இயக்கிய முதல் மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கிய படங்களின் கதை கருவை அடிப்படையாகக் கொண்டது என்று ஒரு கூட்டம் கிளப்பி விட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான பிகில் படத்தின் ஆரம்பத்தில் ஷாருக்கான் நடித்த சக்தே இந்தியா படத்தின் காப்பி என கூறப்பட்டது.

அதையும் சமாளித்து படம் தீபாவளிக்கு வெளியாகி வசூலில் வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஆனால் தற்போது படத்தின் முக்கிய காட்சி ஒன்று ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஒரு காட்சியில் சக மாணவிகளுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் தொடர்ந்து ஓட சொல்லுவார். இறுதியில் அமிர்தா அந்த கோலை கரெக்டாக அடிப்பார். அதேபோல் ஹாலிவுட் படத்தில் பேஸ்கட்பாலை மையமாகக்கொண்ட ஒரு திரைப்படத்தில் இதே காட்சி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதோ வீடியோ ஆதாரம் :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top