fbpx
Connect with us

Cinemapettai

சம்பளத்தில் சங்கரை மிஞ்ச போகும் அட்லீ.. அதுக்கு அடுத்த படம் கிடைக்கணுமல்ல ராசா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சம்பளத்தில் சங்கரை மிஞ்ச போகும் அட்லீ.. அதுக்கு அடுத்த படம் கிடைக்கணுமல்ல ராசா?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர்கள் முன்னிலையில் இருப்பதைப்போல இயக்குனர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் பெரிய அளவு வசூல் கொடுக்கும் படங்களை இயக்குபவர்களும் உள்ளனர்.

அந்த வகையில் பார்த்தால் நீண்ட நாட்களாகவே நம்பர் 1 இடத்தில் இருப்பது இயக்குனர் ஷங்கர் தான். பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். சங்கரின் சம்பளம் கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல் என்கிறது கோலிவுட் வட்டாரம். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரும்பாலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதே ரூட்டில் பயணிக்கிறாராம் அவரின் அசிஸ்டன்ட் அட்லீ. 1990களில் சங்கர் அறிமுகமானபோது எவ்வளவு பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தாரோ அதே போல் தற்போது அட்லீ, தான் இயக்கிய நான்கு படங்களிலும் பெரிய அளவு சாதனைகளை செய்துள்ளார்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படம் 50 கோடியையும், தெறி படம் 150 கோடியும், மெர்சல் படம் 250 கோடியையும், பிகில் 300 கோடியையும் வாரி குவித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது சராசரியாக அட்லீயின் சம்பளம் 30 கோடியாக உள்ளதாக கோலிவுட் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சங்கருக்கு உள்ள நல்ல பெயர் தயாரிப்பாளர்கள் மத்தியில் அட்லீக்கு கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை. படங்களுக்கு சரியான பட்ஜெட் தர முடியாமல் தவித்து வருகிறார். இவரால் பல தயாரிப்பாளர்கள் பலவகையான கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மனைவியையும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு பிக்னிக் கூட்டிச் செல்வதே தயாரிப்பாளர்களுக்கு பெரும் கோபத்தை வரவைப்பது. இதனாலேயே அவருக்கு தமிழ் சினிமாவில் இனி படம் இயக்கும் வாய்ப்பு கிடையாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள் பல தயாரிப்பாளர்கள்.

Continue Reading
To Top