Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவாஜியின் சூப்பர் ஹிட் பட கதையை ஷாருக்கானுக்கு கமிட் செய்த அட்லி.. பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்!
தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லி. அதைத்தொடர்ந்து அட்லி விஜய் நடிப்பில் மூன்று ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பிடித்தார்.
மேலும் அட்லி இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே பழைய தமிழ் படங்களின் கதைகளைப் பின்னணியாகக் கொண்டது என்று பலர் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஹிந்தி படமும் ஒரு தமிழ் படத்தின் உல்டா தான் என்று அடித்துக் கூறுகின்றனர் நெட்டிசன்கள்.
அதாவது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஹிந்தியில் ஒரு படம் நடிக்க போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கான் அப்பா போலீஸ் அதிகாரி, மகன் பக்கா கிரிமினல் என்று இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளாராம். இதில் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே உள்ள ஆடுபுலி ஆட்டம் தான் படத்தின் கதைக்களம் என்றும் கூறுகின்றனர் சினிமா வட்டாரங்கள்.
மேலும் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல தமிழ் படங்கள் இதே போன்ற கதைக்களத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அட்லி இந்தக் கதையைத்தான் உல்டா செய்து ஷாருக்கானை இந்த படத்தில் நடிக்க கமிட் செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த கதையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் சில மாற்றங்களை அட்லி கண்டிப்பாக வைத்திருப்பார் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது.
இவ்வாறு அட்லி ‘அரைச்ச மாவையே அரைச்ச கதையா’ தமிழ் படங்களையே பின்புலமாகக் கொண்டு கதைகளில் சில மாற்றங்களை செய்து படங்களை எடுப்பதை பார்த்த ரசிகர்கள், ‘பாலிவுட்டிலும் இதே கதைதானா என்றும், உன் காப்பி அடிக்கிற பொழப்ப என்னைக்கு தான் நிறுத்துவ’ என்றும் அட்லியை கலாய்த்து வருகின்றனர்.

atlee-sharukhan
