திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

அட்லி கஜானா காலியாகும் நேரம் வந்துருச்சு.. ஜவான் நட்பு எங்கே போய் முடியும்னு தெரியல?

அட்லி அம்பானி, தோனி, ஷாருக்கான் என வேறு லெவல் இடத்திற்கு போய்விட்டார். கடந்த சில வருடங்களாக கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பத்து வருட சினிமா கேரியரில் இன்று அசைக்க முடியாத ஆலமரமாய் நிற்கிறார்.

2013 ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் தனது கேரியரை தொடங்கிய அட்லிக்கு அதன்பின் தொட்டதெல்லாம் தொடங்கியது. தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து தளபதி விஜய்யை வைத்து படம் பண்ணினார். எல்லா படங்களுமே இவருக்கு ஹிட் வரிசையில் சேர்ந்தது.

அட்லியின் தொடர் ஹிட் படங்களால் பாலிவுட் நடிகர்களும் இவருக்கு கால் சீட் கொடுத்தனர். இதை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்ட அட்லி மும்பையில் நான்கு வருடம் செட்டில் ஆனார். பாலிவுட் கிங் காங் ஷாருக்காணை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். படம் ஆயிரம் கோடிகள் வசூலித்து பட்டையை கிளப்பியது.

அதன் பின் எல்லா பக்கமும் அட்லியின் கொடி பறந்து வருகிறது. அம்பானி மகன் கல்யாணத்தில் இந்திய அணியின் கேப்டன் தோனி உடன் இவர் போட்ட ஆட்டம் இவரை வி விஐபி லிஸ்டில் சேர்த்தது. இப்பொழுது படம் தயாரிப்பதிலும் இறங்கிவிட்டார். விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க விருக்கிறார்.

மகாராஜா படத்தில் மூலம் மீண்டும் தன் கேரியரை தூக்கி நிறுத்திய விஜய் சேதுபதி அடுத்து இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை அட்லீதான் தயாரிக்கப் போகிறார். ஜவான் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் நட்பு அட்லீக்கு கிடைத்துள்ளது. அந்த படத்தில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை இப்பொழுது படங்களை தயாரிப்பதில் இறக்குகிறார். கை கொடுத்தால் கஜானா தப்பிக்கும்.

- Advertisement -

Trending News