Connect with us
Cinemapettai

Cinemapettai

DD-sharukhan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீயின் படம் 1000 கோடி வசூலா? ஷாருக்கானை கட்டிப்பிடித்த ஆர்வக்கோளாறு டிடி

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி முன்னணி பெண் தொகுப்பாளராக வலம் வந்தவர். மேலும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக வைத்திருக்கும் டிடிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இவரால் வெகு நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாத அளவிற்கு காலில் பிரச்சினை ஏற்பட்டதால் அதன் பிறகு விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து விலகி, தற்போது பிரபலங்களின் பட புரமோஷன் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இன்னிலையில் டிடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது ஷாருக்கானை சந்தித்திருக்கிறார். அங்கு அவருடன் போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படத்தையும், அவரை இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்திருப்பது போல் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு ஷாருக்கானின் 30 வருட திரை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் ஷாருக்கானின் மீது தீவிர கிரஸ்சுடன் இருந்த டிடி பல ஆண்டுகளாக ஷாருக்கானிடம் பேச நினைத்ததை அந்த திருமணத்தின் போது மனம்திறந்து பேசினாராம். 30 ஆண்டுகளாக எங்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போல் யாரும் இதற்கு முன்பும் இனிமேலும் இருக்க வாய்ப்பில்லை என்று டிடி பூரிப்புடன் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் டிடி, ஷாருக் கானின் தீவிர ரசிகை என்பதால் அவருடன் நயன்-விக்கி கல்யாணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட, ‘அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூல் செய்த ப்ளாக்பஸ்டர் ஆகவேண்டும் என வாழ்த்தியுள்ளார்

டிடி போன்றே ஷாருக்கான் 30 ஆண்டுகால சினிமா பயணத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதற்கு இந்த நேரத்தில், ஷாருக்கான் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். மேலும் தன்னுடைய ரசிகர்களுக்காக இன்னும் கடினமாக உழைத்து அவர்களை ரசிக்கத் வைப்பதன் மூலம் தன்னுடைய கைமாறு செலுத்துவேன் என்று ஷாருக்கான்  பதிவிட்டுள்ளார் .

DD-twit-cinemapettai

DD-twit-cinemapettai

Continue Reading
To Top