Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் பிகில் கூட்டணியா? கதறும் தயாரிப்பாளர்கள்
தமிழ்சினிமாவில் முன்னெல்லாம் படம் எடுத்து ரிலீஸ் ஆன பிறகு கடனாளி ஆவார்கள். ஆனால் தற்போது சில இயக்குனர்களால் படம் எடுக்கும்போதே கடனாளியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு ஒரு அழிவை காட்டுகிறது.
பிரமாண்டம் என்னும் பெயரில் அளவுக்கு அதிகமாக செலவு செய்து படம் தயாரிப்பதால் தயாரிப்பாளர்கள் வாங்கும் கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் சிலர் சேர்த்து வைத்த சொத்தை கூட விற்க்கும் அளவுக்கு சினிமா செய்துவிடுகிறது.
பிரமாண்டம் தேவைதான். ஆனால் பெரிய நடிகர்கள் என்பதற்காக வேண்டுமென்றே பிரம்மாண்டத்தை சேர்ப்பது மிகவும் தவறானது. இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டத்தால் பெரிய தயாரிப்பாளர்கள் அழிந்த கதையும் உண்டு. காரணம் படம் எடுக்கும் போது அவர்கள் வாங்கிய கடனால் படம் ஹிட்டானாலும் லாபம் பெற முடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது.
தற்பொழுது குருவின் வழியில் அவரது சிஷ்யரான அட்லியின் அதே வேலையைத்தான் செய்து வருகிறார். தயாரிப்பு தரப்பு இவருக்கு செலவு செய்வதோடு மட்டுமல்லாமல் இவர் போகும் இடத்திற்கெல்லாம் இவரது மனைவிக்கும் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இதை பெரிய நடிகரான விஜய்யும் கண்டுகொள்வதில்லை.
படம் ஹிட் ஆகிறது என்பது உண்மைதான். ஆனால் அதிலிருந்து தயாரிப்பாளர்கள் எவ்வளவு லாபம் பெறுகிறார்கள் என்பதுதான் முக்கிய குறிப்பாக கருதப்படுகிறது. மீண்டும் அட்லி விஜய் கூட்டணி இணைய இருப்பதாக புதிய தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் தயாரிப்பாளர்களை நினைத்தால்தான் பயமாக உள்ளது. ஹிட் இயக்குநர் என்பதால் எதுவும் சொல்ல முடியாத நிலைமை.
இதுவும் ஒருவகையில் தமிழ் சினிமாவுக்கு அழிவுதான்.
