Tamil Cinema News | சினிமா செய்திகள்
செல்ஃபியால் சின்னாபின்னமாகும் அட்லீ.. விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்
அட்லி என்றாலே காப்பி என்றாகிவிட்டது. படத்தை தான் காப்பி அடிக்கிறார் என்றால் வரவர தன்னுடைய மனைவியுடன் போஸ் கொடுப்பதில் கூட தொடர்ந்து காப்பியடித்து வருவதாக நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
அட்லி இதுவரை இயக்கிய நான்கு படங்களும் அட்டை காப்பி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் அதை ஏதோ தானே சொந்தமாக யோசித்து உருவாக்கியது போல அவர் போடும் சீன் தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதுவும் பெரிய நடிகருடன் சேர்ந்து எடுத்த மூன்று படங்களும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
இதனால் தமிழ் சினிமாவையே அடுத்தது நாம்தான் ஆளப் போகிறோம் என்ற கர்வத்தில் சுற்றி வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இருந்தாலும் அட்லி அதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் அட்லியின் மீது ஏற்கனவே கதை திருடும் வழக்கு ஒன்று கதாசிரியர் சங்கத்தில் நிலுவையில் உள்ளது. எப்போது கையும் களவுமாக அட்லீ மாற்றுவார் என கழுகு போல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் படம் எடுத்தால் தானே பிரச்சனை. நான் ஹிந்திக்கு செல்கிறேன் என பிளைட் ஏறி விட்டார் நம்ம அட்லி. ஷாருக்கானை வைத்து அடுத்து இயக்கப் போகும் படம் தளபதி விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தின் ரீமேக் தான் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருந்தும் ஹிந்திக்கு ஏற்றவாறு ஹிந்தி இயக்குனருடன் கலந்து கதையை மெருகேற்றிக் கொண்டிருப்பதாகவும், பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆனாலும் அட்லியை தமிழ் எழுத்தாளர் சங்கம் விடுவதாக இல்லை. ஒருதடவை வெளுத்து விட்டால் தான் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார் என காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பாக்கியராஜ் அட்லியை விடுவதாக இல்லை. பேசாமல் அட்லி இயக்கும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு மற்றவரின் கதையை உரிமையோடு படம் எடுத்தாலே நல்ல பெயர் கிடைக்கும். ஒரு காலத்தில் கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அட்லியிடமும் நல்ல மேக்கிங் ஸ்டைல் உள்ளது. ஆனால் எல்லாத்திலும் தன் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டுமென நினைப்பது தான் அவர் தவறு எனவும் கோலிவுட் மூத்தவர்கள் பேசி வருகின்றனர். கதையை காப்பி அடித்தால் கூட பரவாயில்லை காப்பியடித்த கதைக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்குவது தான் பலருக்கு எரிச்சலாக உள்ளது.
இந்நிலையில் தனது மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாட அட்லி வெளிநாடு சென்றுள்ளார். அங்கு மனைவியுடன் குதுகலமாய் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். மேலும் அவர் கொடுத்துள்ள போஸ் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது மனைவியுடன் கொடுத்த போஸ் ஒன்றை அட்லி அப்படியே காப்பியடித்து தன் மனைவியுடன் எடுத்துள்ளார். படத்தை தான் காப்பி அடிச்ச, போட்டோ போஸ் கூடவா காப்பி அடிப்ப என ரசிகர்கள் சகட்டுமேனிக்கு அட்லியை சமூகவலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

atlee-copy
மேலும் இனிமேல் உன் பேரு அட்லி இல்ல, சுட்லி எனவும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

atlee-vadivel
