atlee
atlee

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிவுக்கு வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டான் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தமிழகத்தில் வெளியாகிய சில நாட்களில் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.

Vijayendra Prasad

மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பி அது தேசிய அளவிலும் பூதாகரமானதாக வெடிக்கத் தொடங்கியது.

எனவே குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அதற்கும் ஒரு முடிவு எட்டப்பட்டது. அட இதல்லாம் விடுங்க இத படிங்க.

அதிகம் படித்தவை:  தொடர்ந்து 10வது முறையாக விஜய் படைத்த சாதனை
mersal

‘உங்க கதையில் நடிக்கணும்னு விஜய் சார் விரும்புறார்’ என்று பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்திடம் (எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பா) பேசி அவரை கன்வின்ஸ் செய்தவர் அட்லீதான்.

‘தமிழ்நாட்ல எழுத்தாளர்களுக்கு ஏதுப்பா மரியாதை? உரிய சம்பளம் கூட கொடுக்க மாட்டீங்களே?’ என்றாராம் அவர்.

atlee

‘அப்படியெல்லாம் இல்ல சார். உங்க மேல விஜய் சார் நல்ல மரியாதை வச்சுருக்கார். மூணு கோடி சம்பளம் வாங்கித் தர்றேன்’ என்று கூறி, எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்து அவரை கமிட் பண்ணினாராம் அட்லீ.

அதிகம் படித்தவை:  தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்புறம்? படம்தான் முரட்டுப் பாய்ச்சல் பாயுதே… மிச்ச பணம் போயிருக்கும் என்றுதானே நினைக்கிறீங்க? அதுதான் இல்லை. ரிலீஸ் சமயத்தில் 50 லட்சம் கொடுத்து கணக்கை முடித்துவிட்டார்களாம். கிட்டதட்ட ஒரு கோடி சம்பள பாக்கி.

atlee
atlee

அட்லீயை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம் விஜயேந்திர பிரசாத்தால். ‘தமிழ்நாட்ல எழுத்தாளனை மதிக்க மாட்டாங்கன்னு தெரிந்தே குழியில விழுந்துட்டனே…’ என்று குமுறி குமுறி கோபப்படுகிறாராம் மிஸ்டர் பாகுபலி.

சங்க பலகையாக இருந்தாலும், அதுல புரோட்டா மாவு உருட்டிப் பார்க்கறதுதான் எங்க ஸ்டைல்! எங்கய்யா அட்லீ?