அட்வான்ஸ்சே அவ்வளவு கோடிகள் வாங்கிய அட்லீ! அல்லு அர்ஜுன் படம் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 

Atlee bought so many crores of advance in allu arjun’s movie: இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் நம்ம தமிழ் நட்சத்திரம் அட்லீதான்.

தான் இயக்கிய அத்தனை படத்தையும் வெற்றியாக்கிய மிதப்பில் இஷ்டத்திற்கு அளந்து விட்டு அல்வா வாங்கி கட்டிக் கொண்டார் அட்லீ!

ஆம் அட்லி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்து ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்த கையோடு பாலிவுட் சென்றார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து உருவாக்கிய  ஜவான் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்து, உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்து பாலிவுட்டில் கெத்தாக வலம் வருகிறார் அட்லீ.

உலக அளவில் கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து தெறிக்க விட்ட அட்லீ அடுத்ததாக 3000 கோடி வசூலை எதிர்நோக்கி சாருக்கானுடன் கதை கூற போவதாக பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார்.

இது நடக்கும் பட்சத்தில் அட்லியை கையில் பிடிக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

இதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் ஒப்பந்தம் ஆகி உள்ளார் அட்லீ.

சன் பிக்சர்ஸ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்க உள்ள இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் திரிஷா மற்றும் சமந்தா இருவரும் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தயாரிப்பாளர்களிடம் அட்லீ வைத்த டிமாண்ட்

படத்தின் மொத்த செலவு 400 கோடி முதல் 450 கோடிவரை ஆகும் என திட்டமிட்டுள்ளனர்.

இதில் அட்லிக்கு மட்டும் 60 கோடி சம்பளமாம் 10 கோடி அட்வான்ஸ் வாங்கி உள்ளார். அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளார் அட்லீ.

அட்லீ இயக்கும் படங்கள் வணிக ரீதியாக வசூலில் உச்சத்தை அடைந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு படத்தின் லாபத்தில் பங்கு கேட்டு உள்ளார் இந்த பங்காளி.

இதனை எதிர்கொண்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ், அட்லீயை சமாதானப்படுத்தி அடுத்த படத்தில் பார்த்துக்கலாம் என பங்கு கொடுக்காமல் ஏமாத்தி சம்பளத்தோடு நிறுத்தி வைத்துள்ளதாம்.

அட்லீயும் வேறு வழி இன்றி சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு கப்சிப் என்று ஆகியுள்ளார்.

Next Story

- Advertisement -