theri-vijay-atleeஇளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, அட்லி குழுவினர்களின் அபாரமான உழைப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் ‘தெறி’ படத்தின் ஒருசில பகுதிகளை பார்த்த தாணு, படக்குழுவினர்களை பாராட்டியதோடு, அட்லியின் உதவியாளர்களில் ஒருவருக்கு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு ‘தெறி’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அட்லியின் இன்னொரு உதவியாளரும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ‘தெறி’ படம் நன்றாக வந்திருப்பதால் இந்த படத்தின் உதவி இயக்குனர்கள் அனைவரும் மிக விரைவில் இயக்குனர்களாக மாறிவிடும் வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.