Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் மனைவிக்கு இப்படி ஒரு திறமை இருக்கா.! கௌரிகானிடம் தஞ்சம் அடைந்த அட்லீ

பாலிவுட்டில் சிறந்த நட்சத்திர ஜோடி என்றால் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்- கௌரி கான் ஜோடி தான்.

சினிமா நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் தங்கள் வெற்றிகளால் ஜொலித்தாலும் ஒரு சிலருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பது வெற்றிகரமாக அமையும். அதற்கு முக்கியமான காரணங்களாக இருப்பவர்கள் அவர்களுடைய அவர்களுடைய அவர்களுடைய அவர்களுடைய அவர்களுடைய வாழ்க்கைத் துணையாக தான் இருக்கும். அப்படி ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு பார்க்கும் அளவிற்கு நிறைய நட்சத்திர ஜோடிகள் இருக்கிறார்கள்.

அப்படி பாலிவுட்டில் சிறந்த நட்சத்திர ஜோடி என்றால் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்- கௌரி கான் ஜோடி தான். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 24 வருடங்கள் ஆகிவிட்டது. மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். இன்று வரை இவர்களுடைய திருமண வாழ்க்கை என்பது பொதுவெளியில் எந்த ஒரு சர்ச்சைக்கும் உட்பட்டதே கிடையாது. அந்த அளவுக்கு சிறந்த தம்பதிகளாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

Also Read:கோலிவுட்டுக்கு குட் பாய் சொல்லும் அட்லீ.. ஜவானை தொடர்ந்து கிடைத்த வாய்ப்பு

நடிகர் ஷாருக்கானுக்கு தற்போதைய ரிலீஸ் ஆக இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஷாருக்கான் பட ப்ரமோஷன் வேலைகளில் படு பிஸியாக அலைந்து கொண்டிருக்கிறார்.

இந்த பிசியான நேரத்தில் நேற்று ஷாருக்கான் தன்னுடைய மனைவி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் எந்த வயதில் வேணாலும் ஒருவர் தான் நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு என் மனைவி ஒரு எடுத்துக்காட்டு. அவர் ஒரு சிறந்த இன்டீரியர் டிசைனர் என்று பாராட்டினார்.

Also Read:விஜய் அண்ணாவை புடிச்சி தொங்குனது போதும்.. ஷாருக்கான்-ஐ குருவாக ஏற்றுக் கொண்ட அட்லீ.!

ஷாருக்கான் முன்னணி ஹீரோவாக மாறுவதற்கு முன்பு அவர்கள் வாங்கிய வீட்டிற்கு டிசைன் செய்வதற்கு கூட காசு இல்லாத காலத்தில் கௌரி அவராகவே டிசைனிங் செய்தாராம். இன்று அந்த துறையில் முன்னணியாக இருக்கும் இவர் பல பாலிவுட் ஸ்டார்களின் வீடுகளுக்கு இன்டீரியர் டிசைன் செய்து கொடுக்கிறார். அவருடைய வீட்டு வாசலுக்கு கடந்த வருடம் செய்திருந்த டிசைன் கூட இணையத்தில் பயங்கர வைரலானது.

ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லீ தன் புதிய வீட்டிற்கு கௌரிகானை தான் டிசைன் செய்து கொடுக்க சொல்லி இருக்கிறாராம். ஜவான் திரைப்படம் ஆரம்பித்த பிறகு ஷாருக்கானிடம் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் பாலிவுட் ஸ்டார்களுக்கு இன்டீரியர் டிசைன் செய்யும் கௌரி கான் அட்லீயின் வீட்டிற்கும் டிசைன் செய்வது அவர்களுடைய நெருக்கத்தை காட்டுகிறது.

Also Read:விஜய் பாணியில் ஷாருக்கான் செய்த விஷயம்.. ஜவான் படத்தை பற்றி அவரே சொன்ன அப்டேட்

Continue Reading
To Top