அட்லீயை வரச்சொல்லி கதை கேட்டிருக்கிறார் அஜீத். அந்தக் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக, தற்போது சிறுத்தை சிவா இயக்கப் போகும் படம் முடிந்த கையோடு இந்த படத்தை ஸ்டார்ட் பண்ணலாம் என்று கூறிவிட்டாராம். இப்படி செய்தி பரவி கொண்டிருக்க.. விஜய் உடனே அட்லீயை கூப்பிட்டு அடுத்த படத்தை பற்றி பேசியுள்ளார்..

ஆனால் அட்லீ மனசிலும் ஒரு அல்ப ஆசை இருந்தது. அந்த படத்தை நாமளே தயாரிச்சா அது இன்னும் பெருமையாச்சே என்பதுதான் அது. ஆனால் அதற்கெல்லாம் இன்னும் நேரம் காலம் வர வேண்டும் அல்லவா? ஆனால் தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு தான் கொடுத்திருந்த கால்ஷீட்டுக்கு அட்லீயை கோர்த்து விட்டார் விஜய். அதுமட்டுமல்ல, அவருக்கு 15 கோடி சம்பளத்தை பிக்ஸ் பண்ணிக் கொடுத்ததும் விஜய்தான் என்கிறது சினிமா வட்டாரம்.

பீட்சாவுக்கேத்த பில்லுதான்… விடுங்க!