Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிக்காக அட்லீ வைத்துள்ள கதை.. தலைவா ஓகே சொன்னா!
சென்னை: பாட்ஷா 2 படத்தை உங்களிடம் எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி இயக்குநர் அட்லி பதில் அளித்துள்ளார். அதன் விவரத்தை பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், தேவன், விஜயகுமார், ஆனந்த் ராஜ், சரண் ராஜ் உள்பட பலர் நடித்து இருந்தனர்.
ரஜினியின் திரை உலக வாழ்வில மிக முக்கியமான படம் என்றால் அது பாட்ஸா தான். அந்த அளவுக்கு பட்டி தொட்டி எங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் இப்போது தொலைக்காட்சிகளில் வெளியானாலும் மக்கள் இந்த படத்தை பார்க்கவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த அளவுக்கு படம் தாறுமாறாக இருக்கும்.
இந்நிலையில் பாட்ஸா படத்தின் 2-ம் பாகம் குறித்து அவ்வப்போது கேள்விகள் வரும். ஆனால் ரஜினி – சுரேஷ் கிருஷ்ணா இருவருமே ஒரே ஒரு பாட்ஷாதான் இதற்கு மேல் என்றே கூறி வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் பாட்ஷா 2 படத்தை உங்களிடம் எதிர்பார்க்கலாமா என்று இயக்குநர் அட்லியிடம் கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு அட்லி பாட்ஷா 2′ பண்ண வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஏனென்றால், அதுதான் சிறந்த ஆக்ஷன் படத்துக்கான களம். ரஜினி சார் எனும் போது, என்னிடம் கதையொன்று இருக்கிறது. பார்ப்போம். தலைவர் ஓ.கே. சொல்லிவிட்டால் பண்ணிவிடலாம் என்று பதிலளித்துள்ளார் அட்லி.
