கடந்த இரண்டு வாரங்களாக கோட் படம் தான் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் போட்டியின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. 350 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை கிட்டத்தட்ட 170 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டது. இந்நிலையில் இந்த வார இறுதியில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி ஐந்து படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.
லப்பர் பந்து: கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார்.
நந்தன்: கருடன் படத்திற்கு பிறகு சசிகுமார் நடிப்பில் வெளிவரும் இந்த படமும் இந்த வார இறுதியில் ரிலீஸ் ஆகிறது. கிராமத்து கதையில் வித்தியாசமாக நடித்திருக்கிறார் சசிகுமார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கௌரவ வேடத்தில் இதில் சமுத்திரகனையும் நடித்துள்ளார்.
கோழிப்பண்ணை செல்லதுரை: தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படமும் இந்த வார இறுதியில் வெளி வருகிறது. யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார்.
சட்டம் என் கையில்: இதுவரை காமெடி கலந்த கதையில் ஹீரோவாக நடித்தவர் சதீஷ். முதல் முதலாக சீரியஸான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் டீசர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து விட்டது.
கடைசி உலகப் போர்: இந்தப் படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் இயக்கி தயாரித்ததும் ஹிப்ஹாப் ஆதி தான். மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.
- புறக்கணிக்கப்படுகிறதா தளபதியின் கோட் படம்?
- போட்ட பட்ஜெட்டை அள்ளியதா ஏஜிஎஸ்.?
- கோட் படத்தில் நடிக்க இருந்த பிரபலம்