சல்லடை போட்டு அஞ்சுல ஒன்ன செலக்ட் பண்ணிய ஜேசன் சஞ்சய்.. ராசி இல்லைன்னு தடை கல்லாய் நிற்கும் லைக்கா

மூன்று மாதத்திற்கு முன்பு விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போவதாகவும், அதை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. அப்பா விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த நேரத்தில் மகன் இயக்குனராக இப்பொழுது களம் காண உள்ளார்.

ஜேசன் சஞ்சய்யின் தாத்தா அதாவது விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பெரிய இயக்குனர் அவரை போலவே இப்பொழுது பேரனும் இயக்குனராக தன் பயணத்தை தொடங்க உள்ளார். அதற்காக பல தொழில்நுட்பத்தை வெளிநாட்டில் கற்றுள்ளார்.

ஜேசன் சஞ்சய் எடுக்கும் படம் அவரது கனவு படம் எனவும் இதற்காக அவர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உழைத்து உள்ளதாகவும் எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். இதில் அவருக்கு உறுதுணையாக எல்லா நேரத்திலும் தான் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார் சந்திரசேகர்.

தான் இயக்கும் படத்திற்கு ஆர்டிஸ்ட் தேடுதல் வேலையில் கடும் பிசியாக இருந்து வருகிறார் சஞ்சய் . இந்த படத்திற்கு ஹீரோவாக நடிக்க கவின், ஆதி, துல்கர் சல்மான், துருவ் விக்ரம், ஹரிஷ் கல்யாண், அதர்வா என ஏகப்பட்ட பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் இவர்கள் யாரும் ஒத்துவரவில்லை.

ராசி இல்லைன்னு தடை கல்லாய் நிற்கும் லைக்கா

கடைசியாக இந்த படத்திற்கு ராயன் படத்தில் தனுஷ் தம்பியாக முத்துவேல்ராயன் கதாபாத்திரத்தில் நடித்த சந்திப் கிசானை தேர்வு செய்துள்ளார். கடைசியில் ஐந்து நடிகர்களை காஸ்டிங் செய்து ஒரு வழியாக இவரை தேர்வு செய்துள்ளார். இதற்கு லைக்கா முழு மனதாக சம்மதிக்கவில்லை. சந்திப் கிஷான் இதுவரை நடித்த எந்த படமும் ஓடவில்லை. அதனால் சென்டிமென்ட் வசம் சிக்கி உள்ளது லைக்கா நிறுவனம்.

- Advertisement -spot_img

Trending News