Athulya-Ravi

கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள், நண்பர்கள் இணைந்து கோவை பிலிம் மேட் என்ற பெயரில் ஒரு கம்பெனியை உருவாக்கினார்கள். அதன்மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நண்பர்களை கொண்டே காதல் கண் கட்டுதே என்ற படத்தை உருவாக்கினார்கள்.

இதில் அறிமுமானவர்தான் அதுல்யா ரவி. அந்த படத்தில் அதுல்யா ரவியின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது அவருக்கு சமுத்திரகனி நடிக்கும் ஏமாலி படத்தில் நடித்து வருகிறார். சும்மா ஜாலிக்காக, நண்பர்களுக்காக சினிமாவில் நடித்தவர் புரபசனல் நடிகையாகியிருக்கிறார்.

Athulya-Ravi

லதா புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எம்.லதா, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படம் ‘ஏமாலி’.
‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான V.Z.துரை, இந்த ‘ஏமாலி’ என்னும் புதிய படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் யதார்த்த நடிகர் சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Athulya-Ravi

தயாரிப்பு – M. லதா, இயக்குநர் – V.Z.துரை, வசனம் – ஜெயமோகன், ஒளிப்பதிவு – M.ரத்திஷ் கண்ணா, I. பிரகாஷ், இசை – சாம் D ராஜ், பாடல்கள் – மோகன்ராஜ், V.Z. துரை, படத் தொகுப்பு – R.சுதர்சன், கலை – K. ஆறுசாமி, நிர்வாக தயாரிப்பு – V.கார்த்திக், தயாரிப்பு நிர்வாகம் – R.S.வெங்கட், லைன் புரொடியூசர் – முகமது இப்ராஹிம் (ரைட் ஐ தியேட்டர்ஸ்), மக்கள் தொடர்பு – நிகில், டிசைன்ஸ் – ஜோசப் ஜாக்சன்.

Athulya-Ravi

ஏமாலி படத்தில் அதுல்யா, சாம் ஜோன்ஸ் என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், சிகரெட் புகைப்பது போன்று போஸ் கொடுத்திருக்கும் இவரின் புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

adhulya

அதுல்யா ரவியா இது..? என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறது.