இளம் நடிகைகள் இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. தனது கஷ்டத்தை வெளிப்படையாக கூறிய அதுல்யா ரவி

தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அதுல்யா ரவி. இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு அதுல்யா ரவியை பிடித்து போனதால் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இவருடைய உடலமைப்பும், கண் பார்வையும் தான்.

சமீபகாலமாக அதுல்யா ரவி எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடித்து வருகிறார். தற்போது ஜெய்யுடன் எண்ணித்துணிக எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக இவர் பட்ட கஷ்டத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது வளரும் நடிகைகள் எந்த மாதிரியான கஷ்டமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அதுல்யா ரவி சமீபத்தில்தான் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சென்று வந்த ஒரு சில மணி நேரங்களிலேயே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று உள்ளார். இவர் ஏற்கனவே ஒரு நாளைக்கு 3படங்களில் நடிப்பதற்கான கால்ஷீட் கொடுத்துள்ளார். அதனால் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் 3 நாட்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வந்துள்ளார்.

yenni thuniga
yenni thuniga

இந்த படத்தின் மூலம் தன்னுடன் நடித்த பெண்களுடன் நெருக்கமாக ஆகிவிட்டதாகவும் அம்மக்களின் ஏழ்மை எளிய வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் ஒரு சண்டைக்காட்சி நடித்தது மறக்க முடியாது என அந்த அனுபவத்தையும் தெரிவித்துள்ளார்.

ரத்தம் போன்ற திரவத்தை பலூனில் ஊற்றி தனது உடலில் கட்டி வைத்தனர். துப்பாக்கியால் சுடும் போது இயக்குனர் கையில் வைத்திருக்கும் ரிமோட் பொத்தானை அழுத்தும் போது அந்த பலூன் வெடித்து உடல் முழுவதும் ரத்தம் பரவும். இந்த மாதிரியான காட்சியில் முதல் முறையாக நான் நடித்துள்ளேன். துப்பாக்கியால் சுட்ட உடன் ரியாலிட்டி ஆக கீழே விழ வேண்டும் என இயக்குனர் கூறியிருந்தார்.

ஆனால் நான் அமெரிக்கா சென்று சென்னை வந்த சில மணி நேரம் கூட ஓய்வெடுக்காமல் நடித்ததால் இந்தக் காட்சியில் இயக்குனர் பொத்தானை அழுத்தி பலூன் வெடித்த சத்தம் கேட்டவுடன் தன்னை அறியாமலேயே மயங்கி கீழே விழுந்து விட்டேன். அதனைப் பார்த்த படக்குழுவினர் பலரும் வெகுவாக பாராட்டினர். பின்புதான் மயங்கி விழுந்தது அவர்களுக்கு தெரிந்தது என கூறியுள்ளார். இந்த மாதிரி அனுபவங்கள் தனக்கு இந்த படத்தில் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்