Tamil Cinema News | சினிமா செய்திகள்
கில்மா படத்தை தொடர்ந்து முதலிரவு படத்தில் நடிக்கும் அதுல்யா ரவி.. என்னத்த சொல்ல
வர வர நடிகை அதுல்யா ரவி என்ற போக்கு மட்டுபடலையே கோலிவுட் வட்டாரங்களில் அரசல்புரசலாக பேசி வருகின்றன. காதல் கண் கட்டுதே என்ற குறும்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவர் அதுல்யா ரவி.
அதன்பிறகு அதே படத்தை வெள்ளித்திரையில் படமாக்கினர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் கட்ட நாயகர்களுக்கு தொடர்ந்து ஜோடி போட்டு வருகிறார். ஆனால் சமீப காலமாக இவரது கதை தேர்வுகள் மிகவும் மோசமாக உள்ளது.
சமீபத்தில் ஜெய் அதுல்யா ரவி நடிப்பில் வெளியான படம் கேப்மாரி. இந்தபடத்தில் அநியாயத்துக்கு ஆபாசங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதுல்யா ரவி படுக்கையறை காட்சிகளிலும் மிக மோசமாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னாடியே ஏமாளி என்ற படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டினார். தற்போது மீண்டும் முதலிரவை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் உருவாக இருக்கும் அந்த படத்தில் அதுல்யா ரவி நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க திருமணத்திற்கு பிறகு முதலிரவில் ஏற்படும் பிரச்சனைகளை பேசுவதாக இருக்கும் எனவும் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோலிவுட் வட்டாரங்களில் அதுல்யா ரவிக்கு சமீபகாலமாக கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றார்.
