Connect with us
Cinemapettai

Cinemapettai

atharvaa-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பில் இருந்த அதர்வா படம் OTT ரிலீஸ்.. இருந்த ஒன்னும் போச்சு என புலம்பல்

அதர்வா நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. இதனாலேயே எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அதர்வா.

அதர்வா நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் உருவாகி கொண்டிருந்தாலும் அதற்கெல்லாம் அடித்தளமாக ஒரு வெற்றி படம் அமைய வேண்டியது அவசியம்.

அந்த வகையில் 8 தோட்டாக்கள் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள குருதி ஆட்டம் எனும் படம்தான் அடுத்து வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக முதல் முறையாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைவதால் இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என நம்புகின்றனர் படக்குழுவினர்.

ஆனால் ஏற்கனவே இரண்டு வருடமாக ரிலீஸில் இழுத்து விட்ட இந்த படத்தை OTTயில் கொடுத்து விட முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர்.

அந்த வகையில் தீபாவளிக்கு அதர்வா பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் படம் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

இந்த படத்தில் அதர்வா கபடி விளையாட்டு வீரராகவும், ப்ரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியையாகவும் நடித்துள்ளனர். ஒரு குழந்தைக்காக கபடி விளையாட்டு வீரர் எடுக்கும் ரிஸ்க் தான் இந்த படத்தின் கதையாம்.

Continue Reading
To Top