Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது அதர்வா போலீசாக நடிக்கும் 100 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on
‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களை எடுத்த சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா இணையும் படம் தான் 100.
அதர்வா இப்படத்தில் போலீசாக நடிக்கிறார். த்ரில்லர், ஆக்ஷன் ஜானரில் இப்படம் ரெடி ஆகி வருகின்றது. முதலில் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிப்பதாக இருந்தது. பின்னர் ஆரோ சினிமாஸ் காய் வசம் சென்றது, சமீபத்தில் தான் படத்தின் தலைப்பு முடிவானது.
இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
100 FLP
சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் எடிட்டிங். மேலும் இப்படத்தில் யூ-டியூப் வாயிலாக சென்சேஷன் ஆன ‘எருமை சாணி’ விஜய் – ஹரிஜா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.