Videos | வீடியோக்கள்
பட்டயகிளப்பும் ஆக்ரோஷமான போலீசாக அதர்வா முரளி. மிரட்டலான 100 பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மே மாதம் 3ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.
Atharva Murali இன்றைய நெக்ஸ்ட் ஜென் ஹீரோக்களில் முக்கியமானவர். சூப்பர் பிட் 6 பேக் ஆசாமி. டார்லிங்’ படப் புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் த்ரில்லர் படம் 100ல் ஹன்சிகாவுடன் இணைந்துள்ளார். ஆரோ சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் ‘எரும சாணி’ விஜய் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
பல நாட்களாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீஸர் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.
