atharvaa murali

அதர்வா முரளியின் அடுத்த படம் பூமராங். இப்படத்தை ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரித்து இயக்குகிறார். மேகா ஆகாஷ் , ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி, இந்துஜா ஆகியோர் நடிக்கின்றனர். வில்லன் வேடத்தில் ‘ஐ’ பட புகழ் நடிகர் உபேன் படேல் நடிக்கவுள்ளார். ரதன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

boomerang

மேலும் இந்தப்படத்தில் ஆதர்வா 3 வித்யாசமான கெட்- அப்களில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பல மணி நேரம் கஷ்டப்பட்டு அதர்வா ப்ரோஸ்தடிக் மேக்கப் போட்டுக் கொண்டாராம் . மேலும் பாலிவுட்டில் ‘பத்மாவத்’, ‘மாம்’, ‘102 நாட் அவுட்’ போன்ற படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் புகழ் பெற்றவர்கள் ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசாவை வைத்து தான் இந்த படக்குழு கெட் – அப் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  தலைவர் தான் என் சினிமான்ற போதைக்கு கஞ்சா - நான் ரஜினின்ற போதைக்கு அடிமை - ரோஹித் நந்தகுமார்.
இதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறியது…

“இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான பொழுதே, மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே பல விருதுகளை பெற்ற மேக்கப் துறையில் உள்ள வல்லுனர்களான ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசாவை தொடர்பு கொண்டோம்.

சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்கு தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள். அதர்வாவின் கண்கள், மூக்கு, அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்தனியாக அளவெடுத்தனர்.

அதிகம் படித்தவை:  ஹிந்தியில் டப் செய்து இதுவரை 10 மில்லியன் பேர் பார்த்த தமிழ் படங்கள்.
Atharva Murali

ஒரு வகையான மாவை அதர்வா மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் அசையாமல் அமர்ந்தே இருக்க வேண்டும். மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த டீமுக்கு ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது. இந்த மாதிரி விஷயங்களை முதன்முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடைகிறேன்.”