அதர்வா முரளி யின் ‘செம்ம போதை ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வந்தது. ‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

Director R.Kannan with Atharvaa & Producers.

இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் விஸ்காம் ஸ்டுடண்டாக நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

Upen Patel

தற்போது, அதர்வாவுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘ஐ’ பட புகழ் நடிகர் உபேன் படேல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. இயக்குநர் கூறிய கதையில், தனது கேரக்டர் மிகவும் பிடித்து விட்டதால் உடனே நடிக்க ஒத்துக்கொண்டாராம் உபேன் படேல்.

Upen Patel

இப்படத்திற்கு இசை அர்ஜுன் ரெட்டி படம் வாயிலாக உலக பேமஸ் ஆன ‘ரத்தன்’. ஜனவரி மாதம் 19 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது .