Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம், சூர்யா பாதையில் அதர்வா முரளி – வைரலாகுது பூமராங் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !
கோடம்பாக்கத்தில் கிளாஸ், மாஸ், ஸ்டைலிஷ், காமெடி, ரொமான்டிக் என பல தரப்பில் ஹீரோக்கள் உண்டு. எனினும் கடின உழைப்பு , அர்ப்பணிப்பு, கதாபாத்திரத்திற்காக அதீத மெனக்கெடும் ஹீரோ என்ற லிஸ்ட் எடுத்தால் கமல், விக்ரம் சூர்யா தான் நம் நினைவில் வருவார். அத்தகைய ஒரு செயலை தான் அதர்வா செய்துள்ளார்.
பூமராங்
இப்படத்தை ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரித்து இயக்குகிறார். மேகா ஆகாஷ் , ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி, இந்துஜா ஆகியோர் நடிக்கின்றனர். வில்லன் வேடத்தில் ‘ஐ’ பட புகழ் நடிகர் உபேன் படேல் நடிக்கவுள்ளார். ரதன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Atharva Murali
இந்தப்படத்தில் ஆதர்வா 3 வித்யாசமான கெட்- அப்களில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியது. அவரின் நார்மல் காலேஜ் பாய் லுக் ஒன்று. இரண்டாவது லுக்குகாக பல மணி நேரம் கஷ்டப்பட்டு அதர்வா ப்ரோஸ்தடிக் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்ததாகவும் செய்திகள் வந்தது.
இந்நிலையில் தனது மூன்றாவது லுக்கிற்காக அதர்வா தன் தலை முடியை முழுவதும் மழித்துவிட்டு மொட்டை கெட் அப்பில் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் பகுதிக்காக இந்த லுக். சென்னையில் ஹாஸ்பிடல் காட்சிகளாக ஐந்து நாட்கள் நடந்துள்ளது இதன் ஷூட்டிங். இந்த போட்டோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Bommerang – atharva murali
பிஸி கால் ஷீட் உள்ள ஹீரோ, அடுத்து முடி வளர எப்படியும் இரண்டு மாதம் ஆகும் என்ற நிலையிலும் கதாபாத்திரத்திற்கு இது தேவை என்பதால் இம்முடிவை எடுத்ததாக இயக்குனர் கண்ணன் கூறுகிறார்.
