Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதுகில் 5 கத்தி குத்தியும் ரத்தம் சொட்ட கெத்தாக நிற்கும் அதர்வா.. தெலுங்கு படத்திற்கே டப் கொடுக்கும் புதிய பட போஸ்டர்
இளம்பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வருபவர் அதர்வா. மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பானா காத்தாடி என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படம் அதர்வாவுக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து இரும்புத்திரை, சண்டி வீரன், ஈட்டி போன்ற மினிமம் கேரண்டி படங்களில் நடித்தார்.
அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் இமைக்காநொடிகள் படத்தை தவிர வேறு எந்தப்படமும் அதர்வாவுக்கு பெரிய அளவில் பெயரையும் புகழையும் ஈட்டித் தர வில்லை. மேலும் தமிழில் சூப்பர் ஹிட்டடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதர்வா.
இந்நிலையில் அடுத்தடுத்து தள்ளிப் போகாதே, ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் அதர்வாவுக்கு அடுத்ததாக தமிழில் ரிலீசாக இருக்கும் திரைப்படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக முதல் முறையாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விரைவில் டீசர் வெளியாக இருப்பதை அறிவிப்பதற்காக குருதி ஆட்டம் படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அதில் அதர்வா முதுகில் ஐந்து கத்திகள் குத்தி ரத்தம் வழிய வழிய தெம்பாக நிற்கும் புகைப்படம் வெளியானது.

kuruthi-aattam-cinemapettai
முன்னதாக தெலுங்கு படங்களில் தான் எத்தனை முறை அடிபட்டாலும் எழுந்து கெத்தாக சண்டை போடும் காட்சிகள் அமைப்பார்கள். தற்போது அவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் அதர்வாவின் குருதி ஆட்டம் போஸ்டர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
