Tamil Cinema News | சினிமா செய்திகள்
திடீர் சந்திப்பில் அதர்வாவுடன் தர்ஷன்.. லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளும் புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் தனது அடுத்த கட்ட சினிமா வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதர்வாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ஒரு பேட்டியில் தான் ஒரு அதர்வா மாதிரி இருப்பதாக அனைவரும் கூறினார்கள். நானும் அப்படியே உணர்ந்தேன் எனவே அதர்வாவிடம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரொம்ப நாட்கள் ஆசையாக இருந்தது எனக் கூறினார்.
அதற்கு ஏற்றார்போல் சமீபத்தில் தர்ஷன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதர்வா திடீர் என விருந்தினராக கலந்து கொண்டார். உடனே தர்ஷன் அதர்வாவை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பின்னர் இரண்டு லட்சம் லைக்ஸ்களை கடந்து செல்கிறது.
பார்ப்பதற்கு அண்ணன் தம்பி போலவே இருக்கிறார்கள் என மக்கள் கூறி வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ:

atharva-tharshan
