Connect with us
Cinemapettai

Cinemapettai

sema podhai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செம போத ஆகாத படம் இப்படித்தான் இருக்கும்.. மனம் திறந்த அதர்வா

நடிகர் முரளியின் மகன் அதர்வா பாணா காத்தாடி படம் கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமானார். அந்த படத்துக்குப் பின்னர் அடுத்தடுத்து நல்ல கதைகளாகப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்து அதர்வா நடித்து வந்தார். இருப்பினும் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் நாயகனாக மாறிவிட்ட அதர்வா நடிப்பில் இமைக்கா நொடிகள் படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் அதர்வாவுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து செம போத ஆகாத படம் மூலம் அதர்வா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். கிக்காஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் இந்த படத்தை பாணா காத்தாடி இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இதில், அதர்வா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷூட்டிங், போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று படத்தில் ரிலீஸை அதர்வா தள்ளிவைத்தார். அதன்படி படம் வரும் 29ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, மே 18ம் தேதியே ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள செம போத ஆகாத படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய நாயகனும் தயாரிப்பாளருமான அதர்வா, ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்படுவார் என்பதை இந்த படம் மூலம் தெரிந்துகொண்டேன். படத்தைத் தயாரித்து வெளியிடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒரு தயாரிப்பாளராக அந்த கஷ்டத்தை உணர்ந்துகொண்டேன். எதிர்காலத்தில் எனது பேனரில் மற்ற நடிகர்களும் நடிப்பார்கள்.

படத்தின் தலைப்பு செம போத ஆகாத என்று இருப்பதால், இது போதைக்கு ஆதரவான படம் என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். போதைக்கு எதிரான படம் இது. போதையால் ஏற்படும் பிரச்னைகளைச் சொல்லும் படம். போதையில் இருக்கும் ஒருவர் எந்தமாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார், அதன் விளைவுகள் அவர் வாழ்வை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை படமாக்கி இருக்கிறோம். இது சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும். காமெடிக்கு நிச்சயம் கேரண்டி கொடுக்கலாம். நல்ல சினிமா அறிவுள்ள இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், இந்த படத்துக்குப் பின்னர் பெரிய இடத்தை அடைவார்’’ என்று அதர்வா பேசினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top