தமிழ் சினிமாவில் கடைசி வரை காதலை சொல்லாத நடிகர் என்று அழைக்கப்படுகிறவர் முரளி. அவரது மகன் அதர்வாவோ படத்துக்கு படம் காதலில் புகுந்து விளையாடுகிறார்.

அதுவும் அவர் தற்போது நடித்து வரும் ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும் படத்தில் காதல் மன்னாகவே நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  "கிராமத்து விருந்து" கடைக்குட்டி சிங்கம் திரைவிமர்சனம்.!

கதைப்படி அதர்வா தான் ஜெமினி கணேசன். சூரி தான் சுருளிராஜன். அதர்வா ஜோடியாக ஜஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணிதா, அதிதி போஹங்கர் நடிக்கிறார்கள்.

ஒரே படத்தில் நான்கு ஹீரோயின் ஏன் என்றால் கலகலவென சிரிக்கிறார் அதர்வா. இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம். இந்த படத்தில் ஒரு தேடல் இருக்கும் அது சஸ்பேன்ஸ் என்றார் அதர்வா.

அதிகம் படித்தவை:  உதவியாளரை நடுரோட்டில் இழுத்துபோட்டு அடித்த ஹீரோயின்:துரோகம்

படத்திற்கு எம்.ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ஓடம் இளவரசு இயக்குகிறார். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரித்து முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார்.