Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல தீவிர ரசிகராக அதர்வா போடும் கபடி ஆட்டம்.!
Published on
தல அஜித் தீவிர ரசிகராக தற்போது வெளிவந்த படம்தான் பில்லா பாண்டி. இதுபோல் சினிமாத்துறையில் பிரபலமான நடிகர்களை மையப்படுத்தி எடுக்கும் படங்கள் அதிகரித்துள்ளது.
தற்போது அதர்வா நடித்து வெளிவர இருக்கும் படம் தான் குருதி ஆட்டம்.இப்படத்தில் தல அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கபடி போட்டியை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
கபடி போட்டியில் அவர் ஆடும் ஆட்டம் தான் குருதி ஆட்டம் என்று தெரிகிறது. இப்படம் 80% முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் வெளிவர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
