பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை பல வருடங்களாகவே ஹீரோக்கள் 6 பேக், மற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் திகழ்வது சாதாரண நிகழ்வு தான்.

Bollywood Heroes

எனினும் நம் கோலிவுட்டில் இது போல் இருந்தது இல்லை. கிட்டத்தட்ட முதலில் உடல் பிட்னெஸ் என்று ஆரம்பித்தவர் நம் சீயான் விக்ரம் தான். பின்னர் சூர்யா, ஆர்யா, விஷால்,பரத், அரவிந்த் என்று பலரும் தற்பொழுது பிட் மற்றும் ஸ்டைலிஷாக மாறி வருகின்றனர்.

suriya ajith barath

அதர்வா முரளி

சரியான பயிற்சிகள் அனைத்தையும் எடுத்து விட்டு சினிமாவில் நடிக்க வந்தவர் நம் அதர்வா.பாணாக்காத்தாடி படத்தில் பள்ளி மாணவனாக அறிமுகமானவர்.

அதிகம் படித்தவை:  கதகளி விமர்சனம் | Kathakali Review
atharvaa

படங்களின் எண்ணிக்கை குறைவாகவும், தரம் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பது இவரது தாரக மந்திரம். நடித்த 8 படங்களில் அதீத வெரைட்டி காமித்துள்ளார். அதிலும் பாலாவின் பரதேசி, இரும்பு குதிரை இவரின் முயற்சிக்கு சிறந்த உதாரணம்.

atharva

‘செம்ம போதை ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அது மட்டும் அல்லாது ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்த,பூமராங் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  ரசிகர்களுக்கும், இவர்கள் செய்ததற்கும் என்ன வித்தியாசம்,விஜய் ரசிகர்கள் பதிலடி.!!!
atharvaa murali

இந்நிலையில் இவர் ஜிம்மில் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சினிமா ஹீரோவா அல்லது இவர் ஏதேனும் பயில்வானா என்று நாம் யோசிக்கும் அளவுக்கு உள்ளது இவர் உடற்கட்டு.

atharvaa murali

சினிமாபேட்டை டவுட்

அதர்வா ஜி உங்க வீட்ல ஜிம் இருக்கா? இல்ல ஜிம் தான் உங்க வீடா ?